இலங்கையில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.