தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் கடமையாற்றிவரும் தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து குறித்த தாதிக்கு வைரஸ் தொற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்றைய தினம் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் மொத்தமாக 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.