அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

கண்டி மேல் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சார கூட்டமொன்றுக்காக தம்புள்ள செல்லும் வழியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துமாறு ஜனக பண்டார தென்னக்கோன் உத்தரவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கைது செய்யப்பட்டு நவம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்பொழுது அறிவித்துள்ளது.