ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மீளவும் பேசப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குவதாக அரசாங்கம் கூறிய முதல் சந்தர்ப்பம் இதுவல்ல எனவும் கடந்த பெப்ரவரி மாதமும் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என பிரதமர் கூறியதாகவும், தற்பொழுது ஜனவரி முதல் வழங்குவதாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறிய போதிலும் நடைமுறையில் அது கிடையாது.