முஸ்லிம்களின் காணிகளில் பெரும்பான்மையினர் அச்சுறுத்தி விவசாயம் செய்யும் நடவடிக்கைக்கு முஷாரப் எம்.பி சட்ட நடவடிக்கை


(இர்ஷாத் ஜமால்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற் குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளது.

இந்நிலையில் அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர் அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.

குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த (07)ம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்கள் சட்டவிரோத உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயிர் நிலையில் இருந்த விவசாயம் நாசகாரமாக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்வியுற்று அங்கு சென்ற முஸ்லிம் விவசாயிகளை மிரட்டியுள்ளனர்.

இப்பிரச்சினையை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சீ.எம். சஹீல் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்களின் கவனத்திற்கு நேற்று(08) கொண்டு சென்றார்.

விடயம் அறிந்து உடனடியாக அங்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேற்று (08) மாலை சந்தித்தார்.

உரிமைப்பத்திரம் உட்பட சகல ஆவணங்களையும் காண்பித்த விவசாயிகள், தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஆவணங்களை ஆராய்ந்த அவர், எதிர் வரும் நாட்களில் நிர்வாக ரீதியான உரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

தவறும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin