சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவித்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரை சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே இவ்வாறானதொரு பணிப்புரையை சட்டமா அதிபதர் விடுத்துள்ளார்.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைய தவிர்க்கலாம் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரது இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.