(சர்ஜுன் லாபீர்)

எமது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும்,சமுர்த்தி மகா சங்கங்களையும் கணனி மயப்படுத்தும் செயற்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக கல்முனை பிரதேச சமுர்த்தி வங்கியானது சமுர்த்தி திணைக்களத்தின் வங்கி மென்பொருளினூடாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது சமுர்த்தி பயனுகரிகளிற்கான கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையினை வழங்கி வருகின்றது .

கணனி மயப்படுத்தப்படும் செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஆர் எம் சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம் ரம்சான்,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ் நயீமா,முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரிபாயா,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம் நெளஸாத்,சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் எம்.எம் மன்சூர்,கருத்திட உதவியாளர் எம்.ஜெளபர்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.