இளம் சமாதான ஊடகவியலாளர்களின்2019/20 மீளிணைவு வெற்றிகரமான முறையில் நிறைவு

 (சில்மியா யூசுப் இளம் சமாதான ஊடகவியலாளர்)

இளம் சமாதான ஊடகவியலாளர்களின் மீளிணைவானது அண்மையில் நடைபெற்ற மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.

குறித்த பயிற்சிகள் முடிவுற்று ஒரு வருடத்தின் பின் சுமார் 90 இளம் ஊடகவியலாளர்களுடன் (47 ஆண்கள், 43 பெண்கள், சிங்களம் 44, தமிழ் 34, முஸ்லீம் 12) என  கொழும்பு Global Tower ஹோட்டலில்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இம் மீளிணைவானது IREX (சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையம்) நிறுவன உயர் தலைமைப்பீட உறுப்பினர் திருமதி Jean Mackenzie மற்றும் SDJF (இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்) நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் முகமட் அசாட் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  உரையாட்டிய திருமதி Jean Mackenzie இப் புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்து இளம் ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நீங்கள் தொடங்கியவை இன்றுடன் முடிவடையாது, சமூகத்தை ஒருநிலைப்படுத்தி முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் கதைகளை மேலும் உருவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாவும் இலங்கையின் சமாதானம் மற்றும் சகவாழ்விற்கு கூடிய பங்களிப்பு செய்யும் வண்ணமும் உங்களது ஊடக செயற்பாடுகள்  அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் திரு. முகமட் அசாட் தனது உரையில், MediaCorps Watch  எனும் ஓர் புதிய தளத்தினை நாம் உருவாக்கியுள்ளோம். இதனுடாக சமூகத்துக்கு பயனளிக்கக்கூடிய கதைகளை உங்களால் பதிவிடவிடவும், அதனுடாக நீடித்த சமூக தாக்கத்தினை உருவாக்கவும் முடியும் என குறிப்பிட்டார். அதேபோல் MediaCorps Watch நிகழ்ச்சித்திட்ட அதிகாரியான செல்வி நிராஷா பியவதனி குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தொடர்ந்தும் மோஜோ கதைகளை அனுப்பிவைத்து வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல கைகோருமாறு குறித்த இளம் ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.  

குறித்த நிகழ்வின் இரண்டாம் நாள், MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே ஓர் வலைப்பின்னலை ஏற்படுத்தும் நோக்குடன் ஓர் சுவாரஷ்யமான செயற்பாடும் நடந்தேறியாமை விசேட அம்சமாகும்.  

தொடர்ந்து நடந்த அமர்வுகளின் போது, MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினுடாக அவர்களிடம் ஏற்பட்ட சுய மற்றும் தொழில்வாண்மையான மாற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன மேலும் சுய மதிப்பீடு செய்யும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுய மதிப்பீட்டினை மேற்கொள்ள ஓர் தனித்துவமான கேள்விகளை உள்ளடக்கிய வினாப்பத்திரம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அவர்களிடம் ஏற்பட்ட விசேடமான மாற்றத்தினை MSCAT (Most Significant Change Analysis Tool) எனும் பகுப்பாய்வு வினாப்பத்திரத்தினுடாகவும் அவர்களின் அனுபவ பகிர்வினுடாகவும் அவர்களின் மாற்றங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களாக, வியஜம் செய்த சமூகத்தில் இருந்த வறிய சமூக அங்கத்தவர்களுக்கு உதவுவதற்காக தொண்டு திட்டங்களை எவ்வாறு நடாத்தினர், தாம் கற்ற மோஜோ கற்கையினை எவ்வாறு தமது சமூகத்திற்கும் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் பயிற்றுவித்தனர், சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் அல்லது முறைகேடுகளை எதிர்கொள்ள சமூக ஊடக பயனாளிகளைக் கொண்ட படையணிகளை உருவாக்குதல் போன்றன குறித்த இளம் ஊடகவியலாளர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களில் ஒரு சிலவாகும்.            

அடுத்த நாள் மோஜோ கதை வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்களுக்கு ஏற்பட்ட விசேட மாற்றத்தினையும் அவர்களின் அனுபவத்தினையும் மற்றும் இவற்றினுடாக சமூகத்தில் ஏற்பட்ட தாக்கத்தினையும் பிரதிபலிக்கும் வகையில் வெற்றிக்கதைகளாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மோஜோ கதைகளை உருவாக்கினர்.    

மீளிணைவு நிகழ்வின் இறுதியில் MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த பரிசில்தாரிகளுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

MediaCorps புலமைப்பரிசில் திட்டமானது USAID நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையத்துடன் (IREX) இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK