"அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது" - தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்!


"அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது" - தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்!

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள், அகதி வாழ்க்கையை வாழ்ந்து 30 வருடத்தை எட்டியுள்ள இன்றைய காலகட்டத்தில், தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன், அதே இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்த உதவிக்காக, இன்று சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியே...!

அகதி வாழ்வில், கொட்டிலில் தூங்கிய தலைவர் ரிஷாட்டுக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

மக்களுக்காக பசி, பட்டினியில் வாழ்ந்த தலைவனுக்கு “சிறை வாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

தூக்கமில்லாமல், இரவுகளில் மக்களுக்காக ஓடிய அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

ஒவ்வொரு மாதமும் அல்லது வாரத்தில் அறை பகுதியை நோன்பிருந்து கழிக்கும் அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது.

கோபமில்லாத வாழ்வையும், பொறுமையான வாழ்வையும், ஈவிறக்கம் கொண்ட வாழ்வையும் வாழும் அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

மக்களுடன் மக்களாய், சொகுசு வாழ்வை நிராகரித்து, சாதரண வாழ்வை வாழ ஆசைப்பட்டு, மக்களுடன் இருக்கவே ஆசைப்படும் அவருக்கு “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

சிறியோர் - பெரியோர், 

கற்றவர் - கற்றாதோர், 

ஏழை - பணக்காரன், 

சிறிய நிலை - உயர் நிலை

என்ற வித்தியாசம் இல்லாமல் பழகும் அவருக்கு,  “சிறைவாழ்வு” பெரியதொரு கஷ்டமாக இருக்காது. 

என்ற மன வேதனையுடன், 

14 நாட்களை கடந்தும், இன்னும் சிறையில் வாழ்ந்து வரும் எம் தலைவனுக்கு இறைவா! நல்லதொரு விடுதலையை மிக விரைவில் கொடுத்துவிடு..!

இங்கு, ஜனாஸா எரிப்பு முதல், சிறுபான்மை இனம் நசுக்கப்படும் வரை, வாய் மூடி மெளனியாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் போது, எம் சமூகம் இப்போது உன்னை தேடுகின்றது தலைவா!

சமூகத்தின் குரல் நசுக்கப்படுகின்றது என்பதற்கு, உன் சிறைவாழ்வே சிறந்த உதாரணம் தலைவா!

உன் விடுதலையை மிக விரைவில் இறைவன் ஏற்படுத்துவான். இன் ஷா அல்லாஹ்!

கவலைப்படாதே தலைவா!

கலங்காதே தலைவா!

நாம் உனக்காக கலங்கி வாழ்கிறோம்!

14 நாட்களாக நாம் ஏங்கி நிற்கின்றோம்!

இலங்கை அரசியலில் அதிகம் பேசப்பட்ட 

பெயர் “பதியுதீன்”. அதே உனக்கான சிறை பழிவாங்கல்!

உன்னுடன் மக்கள் என்றும்..!

என்றும் உன் தொண்டனாய், 

சப்னி அஹமட்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK