ஒருவர் தும்மினால் வைரஸ் துகள்கள் மில்லியன் கணக்கானவையாக பரவும் அபாயம்! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, November 1, 2020

ஒருவர் தும்மினால் வைரஸ் துகள்கள் மில்லியன் கணக்கானவையாக பரவும் அபாயம்!


கொவிட்-19 வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நிபுணத்துவ மருத்துவர் சஞ்சீவ முணசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகள் குறித்து விளக்கம் அளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் பரவிய வைரஸ் தொற்றின் போது ஒருவர் தும்மினால் நூற்றுக்கான வைரஸ் துகள்கள் பரவியிருந்தால் இம்முறை இந்த வைரஸ் துகள்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கானவையாக பரவும் அபாயம் உண்டு என தெரிவித்துள்ளார்.

ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீடுகளிலேயே இருப்பது மிகவும் உசிதமானது எனவும், இதன் மூலம் வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவுவதனை தடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோய் அறிகுறிகள் காணப்பட்டால் கூடிய சீக்கிரம் வைத்தியசாலைக்கு அறிவித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும், அங்கும் இங்கும் செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment