முகக் கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Wednesday, November 18, 2020

முகக் கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு!


முகக் கவசங்களுக்கு புதிய விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில், சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325 ஆகும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18308 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இன்றும் இலங்கையில் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment