கண்டிக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, November 18, 2020

கண்டிக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


விக்டோரியா நீர்த்தேக்க பகுதிகளில் பாரியளவிலான சுண்ணாம்பு குவாரி அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை உடனடியாக நிறுத்தாவிட்டால், எதிர்காலங்களில் ஏற்படும் நில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கம் பகுதியில் சுமார் 75 சதவீத நிலம் சுண்ணாம்பு கற்களால் சூழப்பட்டுள்ளதென பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலப்போக்கில், இந்த சுண்ணாம்பு அடுக்குகள் சிதைந்து, துளைகளை உருவாக்கும். மேலும் மேற்பரப்பில் அழுத்தும் ஏற்படுத்தும் போது, ​​பாறை அடுக்குகள் வளைந்து, அதிர்வு நிலைமைகளை ஏற்படுத்தும்.

இந்த விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும், நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுண்ணாம்பு சுரங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.


இந்த பிரதேசத்தின் சில பகுதிகளில் 80 முதல் 90 அடி ஆழத்தில் சுண்ணாம்பு கல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதனால் பூமியின் உட்புறத்தில் அதிக துளைகளை உருவாக்குகின்றது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் காலங்களில் இந்த பிரதேசத்தில் பாரிய நில அதிர்வு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment