20ஆம் திருத்தச்சட்டத்தின்கீழ் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களில் தமது திணைக்களத்தில் பணியாற்றும் பலர் இடம்பெறவில்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனதுக்கு கொண்டு வந்துள்ளார். 20வது சட்டத்தின்கீழ் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியினால் மேற்கொள்ளமுடியும். அதன் அடிப்படையில் அவர் நாடாளுமன்ற பேரவைக்கு நீதிபதிகள் சிலரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.
எனினும் இவர்களை காட்டிலும் அனுபவம் வாய்ந்த பலர் தமது திணைக்களத்தில் இருப்பதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் தாம் இதனை பற்றி அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் இது தொடர்பில் ஆராய்வதாக அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களின் தொகை 11 முதல் 17ஆக உயர்த்தப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஏஎம்டி நவாஸ், குமுதின விக்கிரமசிங்க, ஷிரான் குணரட்ன,அச்சேல வெங்கப்புலி, மஹிந்த சமயாநந்த, ஜனக் டி சில்வா ஆகியோரை பரிந்துரைத்துள்ளார்.
எனினும் இந்த பதவிகளுக்காக சட்டமா அதிபர் மேலதிக மன்றாடியார் நாயகங்களான சரத் ஜெயமான்னே, இந்திக தேவமுனி, பர்ஸானா ஜமீல் மற்றும் பிரியந்த நயன ஆகியோரை பரிந்துரைத்துள்ளார். அத்துடன் தமது திணைக்களத்தின் சிலரையும் இந்த பதவிகளுக்காக நியமிக்க சட்டமாஅதிபர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதி சிலரை பரிந்துரைத்துள்ளார்.
இதற்காக மேல் நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜயசுந்தர, டிஎன் சமரகோன், எம் பிரசன்ன,எம்ஜேஎம்.லாபீர், சிபி கீர்த்திசேன, சம்பம் அபேகோன், சம்பத் விஜேரதட்ன, விக்கும் களு ஆராச்சி, உதய கரலியத்த, எம் ஏ ஆர் மரிக்கார், ஆர்.குருசிங்க,ரி.சசி மஹேந்திரன், சம்பா ஜானகி ராஜரட்ன, கிஹான் குலதுங்க மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவையிடம் பரிந்துரைத்துள்ளார்
அதேநேரம் இந்த பதவிகளுக்காக தமது திணைக்களத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களான சிரேஸ்ட மன்றாயடியாளர் நாயகங்களான விவேக சிறிவர்;த்தன,அனூஸா பெர்ணான்டோ சமரநாயக்க, பிரதி மன்றாடியார் நாயகங்களான விக்கும் டி ஆப்ரு, மாயாதுன்னே கொரையா, மற்றும் குமரன் ரட்ணம் ஆகியோரை சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin