அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த 3ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணுவதில் பல்வேறு குழப்ப நிலைமைகள் நீடித்து வந்தது, இந்த நிலையில் சற்று முன்னர் பைடன் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 தேர்தல் கல்லூரிகள் அல்லது அதற்கு மேல் வெல்லும் வேட்பாளர் அந்நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அந்த வகையில் இன்றைய தினம் இறுதியாக கிடைக்கப் பெற்ற பென்சில்வேனியா மாநில முடிவுகளுடன் பெய்டனுக்கு 273 தேர்தல் கல்லூரிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இன்னும் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் பைடன் போதியளவு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, அமெரிக்காவின் 46ம் ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் தெரிவாகியுள்ளார்.

மேலும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் முதலாவது கறுப்பின மற்றும் தென் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தலில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.