அம்பாறை மாவட்ட கல்முனையில் உள்ள இறக்காமம் பகுதியில் மேலும் இரண்டுகொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுனன் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு புத்தகக் கடையில் பணிபுரிந்து வரும் ஒருவர் அண்மையில் கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டபீ.சி.ஆர் சோதனைகளின் போது தொற்றாளியின் தந்தை மற்றும் சகோதரருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 22 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.