விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்ந்தும் இலங்கையில் தகனம் செய்யப்படுவது குறித்து ஓஐசி கவலை


இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் அனைவரையும் அரசாங்கம் தகனம் செய்கின்றது என வெளியாகும் தகவல்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முஸ்லீம்கள் உட்பட அனைத்து மத சிறுபான்மையினரும் தங்கள் உடல்களை புதைக்கும் நடவடிக்கையை தடை செய்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தினை பல மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன, ஐநாவின் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐநா ஆணையாளர் முஸ்லீம் சிறுபான்மையினரின் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான உரிமையை நிலைநாட்டுமாறு அரசாஙகத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உலகசுகாதாரஸ்தாபனம் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யுமாறு எந்த பரிந்துரையிலும் பரிந்துரைக்கவில்லை இதன் காரணமாக தகனத்தை ஒரு கட்டாய நடவடிக்கையாக செயல்படுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் முஸ்லீம் மக்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதற்கு அவர்களுக்குள்ள உரிமையை மதிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள மனித உரிமை கடப்பாட்டினை நிறைவேற்றவேண்டும், முஸ்லீம்கள் தங்கள் மத நம்பிக்கைகள் கடப்பாடுகளிற்கு ஏற்ப, உயிரிழந்தவர்களின் உடல்களை கௌரவிப்பதற்கான விட்டுக்கொடுக்கமுடியாத உரிமையும் மதிக்கப்படவேண்டும்,என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK