கொழும்பு – லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும் தாதியரும் ஊழியர் ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே குறித்த சிறுவர் வைத்தியசாலையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது