மேல் மாகாணத்திலிருந்து இன்றிரவு 10 மணிமுதல் ரயில் சேவைகள் நடத்தப்படமாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மேற்கு மாகாணத்திலிருந்து ரயில் சேவைகளை நடத்துவதற்கு சுகாதார தரப்பு அனுமதி வழங்காததை அடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது