உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேபோல், அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மேல் மாகாணத்தின் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கான பயணங்களை தடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments