கொரோனாவினால் மரணிப்பவர்களை, நல்லடக்கம் செய்யவும் முடியும் என்ற அனுமதியை சுகாதார துறை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது. அரசின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இதனை சகோதர இணையதம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது . அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களின் முயற்சியினால் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறு, இன்றைய 09.11.2020 அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சர் உறுதிப்படுத்தியதாக்க செய்தி வெளியிட்டுள்ளது இது தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரியை தொடர்புகொள்ள பிளாஷ் நியூஸ் முயற்சித்த போதும் அது பயனில்லவில்லை
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK