மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல காரியாலயத்தின் முகாமைத்துவ உதவி பெண் அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரியால் காவல்துறையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கம்பஹா காவல்துறையினரால் குறித்த பொறியியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.