ரிஷாட் பதியுதீன் கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுதலை..!


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடும் பிணை நிபந்தனைகளுடன் செல்ல கொழும்பு - கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அரச பேருந்து ஊடாக அழைத்து சென்றமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறி பொது மக்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கீழ் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் பெறுமதியான 2 சரீர பிணையிலும் செல்ல அவருக்கு அனுமதிக்கப்பட்டது.

அந்த பிணையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் நெருங்கிய உறவினர்களாக இருத்தல் அவசியம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ரிஷாட் பதியுதீன் அங்கு முன்னிலையாக வேண்டும் எனவும் கோட்டை கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளார்.

தற்போது புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் நாளைய தினம் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து அவர் நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post