கொரோனா வைரஸ் காரணமாக சாலைகளில் விழுந்து மக்கள் இறந்துவிட்டதாக கூறி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டதாக கூறி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி - கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக வீதிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலியான புகைப்படங்களை இவர் பதிவிட்டிருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை இவை தவறானவை என்று நேற்று செய்தியாளர்களிடம் துறையின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். அத்துடன் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி, 46 இறப்புகளில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் காரணமாக சாலையில் மரணமானமை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.