அனுராதபுரம் நகரை சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள மேலும் 81 யாசகர்களை தனிமைப்படுத்த நேற்று பிற்பகல் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அனுராதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

மேலும், அனுராதாபுரம் நகரில் உள்ள 81 யாசகர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தனிமைப்படுத்த அனுராதபுரம் நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று உறுதியான 80 வயதுடைய குறித்த யாசகர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.