கொரோனா வைரஸ் பாதிப்பினால்
உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய உலடங்களை அடக்கம் செய்ய அனுமதித்தால் பௌத்தர்கள் வீதிக்கு இறங்கி தமது வழிபாடுகளை மேற்கொள்ள நேரிடும் என்கிறார் பாஹியங்கல ஆனந்த தேரர். கொரோனா சூழ்நிலையில் பௌத்தர்களும் தமது வழிபாட்டு நடவடிக்கைகளைத் தியாகம் செய்துள்ளதாக ஞானசார அண்மையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தொடர்ச்சியாக கடும்போக்குவாத தேரர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, அடக்கம் செய்ய அனுமதித்தால் வீதிகளில் இறங்கி பகிரங்கமாக பூஜை வழிபாடுகளை செய்யப் போவதாக ஆனந்த தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.