விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் சமய நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இந்த சமய வைபவம் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்றது.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துக்கொண்டதுடன்,அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு விசேட அனுமதியை வழங்கி இருந்தது.