ஷானி அபேசேகரவிற்கு கொரோனா!


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஷானி அபேசேகர கடந்த தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post