வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றைய தினம் இரண்டாவது நாளாக பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி, இன்று (19) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அசை்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய நேற்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK