உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாரி சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதிர் பாதிமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வெலிகடை சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் 22 பேர் பெண்கள் எனவும் சஹ்ரான் ஹசீமின் மனைவியும் அவர்களுள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. அவர் உள்ளிட்ட தொற்றாளர்கள் சிகிச்சைக்காக வெலிகந்தை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.