கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் 60 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்களில் எவருக்கும் வைத்தியசாலையினுள் தொற்று ஏற்படவில்லை. குறித்த அனைவருக்கும் வௌி பிரதேசங்களில் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்