இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று - சமூக மட்டத்தில் நோயாளி கண்டுபிடிப்பு


கம்பஹாவில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேர் மற்றும் அந்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தொற்றாளர் தொடர்பில் கிடைக்கும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் உரிய முறையில் சுகாதார முறைகளை பின்பற்றுமாறு அரச தகவல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது புதிய நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post