ராகம மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு தப்பிய 60 வயது கோவிட் -19 நோயாளி கைது செய்யப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என் டி.ஐ.ஜி அஜித் ரோஹான சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தப்பிச்சென்று இருந்த இவரை பிடிக்க பொதுமக்கள் உதவிகளும் நாடு பட்டிருந்த நிலையில் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற மேற்படி நபர் சென்ற இடங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.