ராகம கொரோனா நோயாளி தப்பியோட்டம் – நோயாளி பொது போக்குவரத்தில் – முதற்கட்ட விசாரணை ஆரம்பம்


ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காய்ச்சல் காரணமாக வைத்தியாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு இரவு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பரிசோதனை முடிவு இன்று காலை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய அந்துள்ளது. எனினும் குறித்த நோயாளி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோயாளி பொது போக்குவரத்தினை பயன்படுத்தி தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவல் தெரிந்தால் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்படுகின்றது 0112854880, 0112854885

இந்நிலையில், சீதுவை பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK