தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த பெண் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்


வெலிகந்த பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார். 68 வயதான பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியின் தாய் என தெரியவந்துள்ளது. இவர் கம்பஹா, வரபலன, உடப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர். எனினும் குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார். மகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமை அடுத்து, அவரின் தாயை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து சென்று 10 நிமிடங்களில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post