கொரோனா அச்சம் – ஹொரணை பிரதேசத்திற்குள் பிரவேசிக்க வேண்டாமென எச்சரிக்கை!


ஹொரணை பிரதேசத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வரும் ஹொரணை கந்தான்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நாகொடை வைத்தியசாலையில் நேற்று மதியம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நோயாளி உடனடியாக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் மனைவி ஹொரணை வைத்தியசாலையில் தாதியாக சேவையாற்றுவதால், அது தொடர்பாக ஹொரணை வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹொரணை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளியும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினரும்  தளபாடக் கடை ஒன்றுக்கும் நிதி நிறுவனம் ஒன்றுக்கும் சென்றுள்ளதையடுத்து தற்காலிகமாக அவற்றை மூடுமாறு சுகாதார திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஹொரணை பிரதேச பொதுச்சுகாதார அதிகாரி, அச்சப்படுவதற்கு ஒரு காரணமுமில்லை என்றும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹொரணை பிரதேச 59 குடியிருப்பாளர்களுக்கு அங்குருவதொட்ட பொதுத் திடலில் பிசிஆர் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK