அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய எதிர்தரப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் எவ்வித வரப்பிரசாதங்களையும் வழங்கவில்லை.


ஆளும் தரப்பினருக்கு ஆதரவு வழங்கியதால் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் எதிர் தரப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.

எதிர்தரப்பினரது ஆதரவு இல்லாமல் கூட 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் பலம் ஆளும் தரப்பினரிடமிருந்தது.

20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட சாதகமான காரணிகளை கருத்திற் கொண்டு எதிர்தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள்.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஆதரவு வழங்கிய எதிர்தரப்பின் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் எவ்வித வரப்பிரசாதங்களையும் வழங்கவில்லை என்றார்.