மதிப்புக்குரிய இஷாக் ரஹ்மானுக்கு ஒரு திறந்த மடல்...!


கௌரவ (அல் ஹாஜ்) இஷாக் ரஹ்மான் அவர்களே!

உங்களின் ஆதரவாளர்களின் ஒருவரான அன்வர் சிஹான் எழுதிக் கொள்வது. அதிக மனக் கசப்புகள், கோபங்கள் , வெறுப்புகள், எதுவுமின்றி எனது பதிவை வரைகிறேன்.  ஏனெனில் நீங்கள் தற்போது மிகுந்த விமர்சனங்களை மனதில் சுமந்தவராக இந்த பதிவை படிக்க நேரிடும் என்பது எனக்குத் தெரியும். இதுபோன்ற கட்டுரைகளை படிப்பது இந்த நாட்களில் வழக்கமான ஒன்றுதானே என்றெண்ணி சங்கடங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். 

எங்கள் மாவட்டத்தில் உள்ள, உங்களின் பல ஆதரவாளர்களின் ஆயிரம் ஆயிரம் கவலை கலந்த மனக் குறுகுறுப்புகள், ஒருசிலரின் ஆதங்கம், கற்பனை கதைகள், இவைகளை கேட்டதன் பின்னரும், இன்னும் எமது சமூகம் பல உரிமைகளை இழந்து, அநீதி இழைக்கப்பட்டு நீதிகள் மறுக்கப்பட்டு , நடுத்தெருவில் விடப்பட்டுள்ள நிலையில். ""உங்களுக்கு முழு ஆதரவு தந்தவன் என்ற ரீதியில் என்னால் அவர்களின் ஆதங்க வலிகளை நாளும் செவிமடுக்க முடியாதவனாக, ஒரு கடிதத்தினூடாகவேனும் நமது சமூகத்தின் உளக்குமுறல்களை, ஆதரவாளர்களின் மன வேதனைகளை வெளிக்கொணராமல் என்னால் எவ்வாறு இருக்க முடியும்? ஆதரவாளர்களின் மன சங்கடங்களுக்கு அப்பால், சமூகத்தின் கண்ணீர் கதைகளை பற்றி சொல்வதே சிறந்தது.

மதிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்களே!

ஒரு இஸ்லாமியரின் இறுதித் தருவாய் இறைவனை நாடும் பயணம், நல்லடக்கம் என்பது  முக்கியமான ஒரு அம்சம். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யமுடியும் என்று உலக சுகாதார மையங்கள் அனுமதி வழங்கிய விடயங்களை தாங்கள் அறிவீர்கள்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரான தங்களுக்கு, முஸ்லிம் சமூகம் தற்போது மிகவும் வேதனையை அனுபவிக்கும் விடயம் ஜனாஷா எரிப்புதான் என்பதை ஒரு தொண்டன் பதிவு போட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.  சிங்கள பௌத்தர்களால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், கடைசியில் சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்களால் தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது'

இப்போது அதை பற்றிப் பேசி காலநேரத்தை வீன்னடிக்க விரும்பவில்லை. அத்தோடு நீங்கள் 20 வது சட்ட திருத்தத்துக்கு வாக்களித்ததையோ, அரசுடன் இணைவதையோ, விமர்சனத்துக்கு உள்ளாக்கும் தேவையும் எனக்கில்லை.

உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் அரசாங்கத்தோடு இனைந்து சேவை செய்வதற்கு முன், முழு முஸ்லிம் சமூகத்தில் தேவையாக உள்ள ஜனாஷா எரிப்பு விடயத்தில் கவனம் கொண்டு நல்லடக்கம் செய்யும் உரிமையை பெற்றுத் தாருங்கள்.

கௌரவ உறுப்பினர் அவர்களே! 

தகுதியோ தராதரமோ இல்லாமல், "தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரர்கள்" என்பது போல நினைத்தவாறு தங்களை விமர்சிக்கும் அனைவருக்கும் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது, சிலரின் அறியாத தன்மையின் விளைவு தான், சமூகத்தை பாதாளத்தின் எல்லைவரை தள்ளிவிட்டிருக்கிறது.

மதிப்புமிக்க உறுப்பினர் அவர்களே! 

நிறைவாக! 

நீங்கள் அரசுடன் இணைய தயாராகி வருவதாக அறியக் கிடைக்கிறது. அதற்கு நான் எதிர்ப்பு அல்ல.

ஆனால் சமூகத்தின் உடனடித் தேவையாக உள்ள இந்த ஜனாஷா விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வை பெற்றுக் கொடுங்கள். இது வெறும் பதிவல்ல , பாதிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனங்களின் தேங்கி நிற்கும் சில வரிகள்... 

மக்களின் அவலங்களின் கனதியையும், இப்பதிவின் முழு நோக்கத்தையும் தாங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்வர் சிஹான்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK