கொழும்பின் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK