ஊரடங்கு குறித்த முழுமையான தகவல் உள்ளே..!


களனி வலையத்திற்கு உட்பட்ட ஜா – எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு வலையத்திற்கு உட்ப்பட்ட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK