பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு திடீர் இடமாற்றம்


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபரால், பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென ​பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


அதன்கீழ், சட்டம், ஒழுங்கு மற்றும் நன்னடத்தைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் ஊடகப் பிரிவிக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், ஈ.எம்.யூ.வீ. குணரத்ன சுற்றாடல் பிரிவுக்குப் பொறுப்பாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான மேல் மாகாணம் வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய, பிரதி பொலிஸ்மா அதிபரான, நுவன் வெதசிங்க காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

சுற்றுலா மாவட்டத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய கே.வீ.டீ.ஏ.ஜே. கரவிட மேம்பாட்டு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்துக்குப் பொறுப்பான எச்.என்.கே.டி. விஜய ஸ்ரீ மேல் மாகாணம் வடக்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

அதேப்போல், காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.ஜீ.ஜே. சந்ரகுமார தொழிநுட்ப பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

நலன்புரி விடயங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.சீ. மெதவத்த மனித வள அபிவிருத்தி பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

மனித வள முகாமைத்துவ பிரிவுக்குப் பொறுப்பாக கடமையாற்றிய எம்.என். சிசிர, வன்னி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்ளப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான எஸ்.டீ.எஸ்.பீ. சந்தநாயக்க மொனராகலை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

வன்னி மாவட்டத்துக்குப் பொறுப்பான எல்.ஏ. செனவிரத்ன, சுற்றலாப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்,ஜீ.ஏ.என்.எல். விஜேசேனவுக்கு மேம்பாட்டு பிரிவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது இரத்துச் செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபரால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post