சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக முன்னாள் மாத்தளை மேயர் ஹில்மி முஹம்மத் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

பிரபல மாணிக்க வியாபாயராரியான இவர், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மைத்துனருமாவார். 2002ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் மாத்தளை மேயராக இவர் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பல தசாப்த காலமாக நெருங்கி செயற்படும் இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக அஸ்மி தாஸீம் இறுதியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.