அரசியல் காழ்ப்புணர்ச்சியே தலைவர் ரிசாதின் கைது முயற்சி

 


ஹஸ்பர் ஏ ஹலீம்

அரசியல் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியே முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்வயற்காக முனைகிறார்கள் இவ்வாறான தேவையற்ற கைதுகளை உடன் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் இன்று (17) சனிக் கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களை பஸ்கள் மூலமாக வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டு சென்றதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனை முறையாக நேர்மையாக செய்தபோதும் வீண் பழி சுமத்தி பழி தீர்க்கும் அரசியல் நாடகமாக தற்போது கைது செய்வதானது பெரும் வேடிக்கையாக உள்ளது. 

சிறுபான்மை சமூகத்தின் குரலை நசுக்கும் செயலாகவும் இந்த கைது விவகாரத்தை நாம் பார்க்கிறோம் ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ விடுங்கள் சிறுபான்மை சமூகத்தின் நிம்மதியை சீர் குழைத்து மகாகள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனை கைது செய்வதனை வன்மையாக கண்டிக்கிறோம். எந்தவித குற்றங்கள் இருப்பினும் நீதியானதும் நேர்மையானதுமான விசாரனைகளை நடத்துங்கள் சிறைப்படுத்தி விட்டுத்தான் விசாரனை நடாத்துவோம் என்பது எமது சமூகத்துக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தும்.

மூவின சமூகமும் ஒற்றுமைப்படவேண்டும் எனவும் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் நினைப்பவர் ஒற்றுமையை வலியுறுத்தியே தனது அரசியல் அதிகாரத்தை காலம் காலமாக கொண்டு சென்றவர் இவ்வாறான தேவையற்ற வீணாண கைதுகளை நிறுத்த வேண்டும் தேவையற்ற கைதுகளால் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முனைவதும் காலத்திற்கு பொறுத்தமல்ல சிறந்த தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் நேசிக்கும் இவ்வாறான தலைமையை கைது செய்வதை நிறுத்தி நிம்மதியாக வாழ வழிவிடுங்கள் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK