கல்வி பொதுத்தராதர உயிர்தர பரீட்சையில் பரீட்சாத்தி ஒருவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வாதுவ மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பரீட்சை மண்டபத்தின் மேலதிக மேற்பார்வையாளர் காவல்துறையினரிடம் முறையிட்டதை அடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரான ஆசிரியர் பரீட்சை ஆணையர் ஜெனரலின் பரிந்துரையின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் பரீட்சை ஆணையாளருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.