ரிஷாட் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே: ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும்- இராதாகிருஷ்ணன் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 0718885769

Friday, October 16, 2020

ரிஷாட் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே: ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும்- இராதாகிருஷ்ணன்


ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், “மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் நோக்கில், தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து அவர்களை மன்னாருக்கு அழைத்துச் செல்வது வழமை. அந்த நடவடிக்கை சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போதும் இடம்பெற்றுள்ளது.

அப்படியிருந்தும் ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜித சேனாரத்தன, சம்பிக்க ரணவக்க ஆகியோரை கைதுசெய்து அரசியல் ரீதியில் பழிவாங்கல்களை தீர்த்துக்கொண்ட அரசாங்கம், அதன் அடுத்தக்கட்டமாக ரிஷாட்டையும் இலக்குவைத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

இதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டால்தான் அந்த நாட்டில் ஜனநாயம் மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படும்.

எனவே, இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு நாட்டில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. மதத் தலைவர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும்கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாமும் அதனை ஆதரிக்கத் தயாரில்லை. தற்போது 20ஆவது திருத்தம் பற்றி கதைப்பது பயன் இல்லை. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி நாட்டைப் பாதுகாப்பதற்கு 20 ஐ கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் உரியவகையில் உதவித் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment