தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியினுள் மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிப்பு ஏற்படாது.

சுகாதார முறைகளுக்கு அமைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் தற்போது கொழும்பு வந்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டத்தினால் தடை இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.