அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடைய செயலாளர் அல்ஹாஜ் முபாரக் மதனியுடைய மறைவு முஸ்லீம் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 


அவர் தனது அனுதாப அறிக்கையில் குறிப்பிடுகையில், அல்ஹாஜ் முபாரக் மதனி அவர்கள்  ஜம்மியதுல் உலமாவுடைய செயலாளராக, உப தலைவராக பல பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒருவர். 


மகரகம கபூரிய்யா அறபுக் கல்லூரியை தனது வாழ்க்கையாகவே கருதி அதற்காகவே வாழ்ந்த ஒருவர். அதே போன்று பல்வேறு அரபுக் கல்லூரிகளையும், பள்ளிவாயல்களையும், உலமாக்களையும் உருவாக்குவதிலே அரும் பாடுபட்டவர். 


புகழை விரும்பாது மறைமுகமாக மார்க்கப் பணிகளை ஆற்றிய ஒரு மகான். என்னோடு மிக நெருக்கமாக பழகிய ஒருவர்.  அன்னாரது மறைவையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம். 


அல்லாஹுத்தாலா அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களது நல்லமல்களுக்காக மிக உயர்ந்த சுவனபதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக. என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அனுதாப அறிக்கையில்  மேலும் குறிப்பிட்டார்