கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

அதனடிப்படையில் புறக்கோட்டை மற்றும் கொம்பனிதெரு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பின் பதிவு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்