இலங்கையில் பரவும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம்! உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, October 25, 2020

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம்! உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம்


இலங்கையில் கடந்த நான்காம் திகதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கொரோனா தொற்றாளர்களின் உடலுக்குள் உள்ள வைரஸின் அளவு அதிகமாகும். ஏனைய காலப்பகுதிகளை விடவும் தற்போது பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துள்ளதனை காண முடிகின்றது.

இந்நிலைமையில் மேலும் வேகமாக கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளது. எனினும் இன்னமும் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. வைத்தியசாலைகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அதிகமாக சமூகத்திற்குள் வருகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றார்கள். இவ்வாறு தொடர்பு கொள்வதனால் பரவும் ஆபத்து அதிகமாகும்.

அரசாங்கத்திற்கு அல்லது சுகாதார பிரிவிற்கு இதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை கூட ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது.

உடனடியாக இந்த நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயோதிபர்கள், நாள்பட்ட நோய் தொற்றாளர்களிடையே கொரோனா பரவி அதிக மரணங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment