களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக களுத்துறையின் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் களுத்துறையின் மத்துகம பிரதேச செயலகத்தின் பதுகம நவ ஜனபதய கிராமம் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.