நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது ரிஷாத்துக்கு விசேட சலுகையளித்த அதிகாரிகள் யார்? அறிக்கை சமர்ப்பிக்க சிஐடிக்கு நீதிமன்று உத்தரவு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Monday, October 19, 2020

நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது ரிஷாத்துக்கு விசேட சலுகையளித்த அதிகாரிகள் யார்? அறிக்கை சமர்ப்பிக்க சிஐடிக்கு நீதிமன்று உத்தரவு


( எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை, ஏனைய சந்தேக நபர்களுக்கு இல்லாத, விசேட சலுகையுடன், அவரை மறைத்து விசேடமாக நீதிமன்றில் ஆஜர் செய்தமை தொடர்பில் பூரண விசாரணை ஒன்யை முன்னெடுத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு , சி.டி பிரதானிக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இது குறித்து நீதிமன்றுக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், அவரை மன்றில் ஆஜர் செய்யும்போது, சி.ஐ.டி. அதிகாரிகள், வழமைக்கு மாற்றமாக, நீதிவானின் உத்தியோகபூர்வ அறைக்கு முன்னாள் அவரது கார் நிறுத்தப்படும் இடம்வரை சந்தேக நபரை அழைத்துவந்த வாகனத்தை செலுத்தினர். 

அத்துடன் ஊடகங்கள் அவரை படம் பிடிப்பதை தடுக்க, ஒரு குழு அவரை முற்றாக மறைத்து நீதிமன்றுக்கு அழைத்து வந்தனர்.

முறைப்பாட்டாளர் தரப்பு, சி.ஐ.டி. எவர் செய்தாலும் தவறு தவறே. இதில் நான் சந்தேக நபரை குறை கூறவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் முன்வைத்த விசேட காரணி தொடர்பில் ஆராய்ந்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

No comments:

Post a Comment